வவுனியா ஆதார வைத்தியசாலையில் இன்று காலை காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
செட்டிகுளம் முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.