முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் நேற்று (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் – திறப்பனை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் பயணித்த கார் எதிரில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த லஹிரு திரிமான்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.