எயார் இந்தியா பெங்களூர் – சான் பிரான்சிஸ்கோ விமானத்தில் பயணித்த ஒருவரின் உணவில் உலோகத் தகடு ஒன்று காணப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் எயார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI 175 விமானத்தில் இடம்பெற்றுள்ளது.

பயணத்தின் இடையே பயணிக்கு எயார் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டதையடுத்து உணவில் உலோகத் தகடு ஒன்று இருப்பதை பயணி கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எயார் இந்தியா நிறுவனம்,

“உணவில் உலோகத் தகடு இருப்பதை பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்பதுடன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம்” என விளக்கம் அளித்துள்ளதோடு  குறித்த தவறுதலுக்கு  மன்னிப்பும் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here