ரூபா ஒதுக்கீடு பாடசாலைகளில் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக அடுத்த வருடத்திற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (13) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கு பதிலளிக்கும்பொழுது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலைகளை விளையாட்டுத்திறன்மிக்க பாடசாலைகளாக நியமிக்க அடுத்த வருடம் நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சர் தெரிவித்தார்.
மேற்குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.