வெசாக் சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைத்துள்ளனர்.நேற்று (24) இரவு திவுலபெலஸ்ஸ ரொடலவெல விளையாட்டரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற விழா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் திவுலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40 மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் ஹிங்கிரான்கோட்டை வைத்தியசாலையிலும் ஏனைய மூவர் மஹியங்கனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.