ஜப்பானிய தனியார் நிறுவனமொன்றினால் இன்று ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவைத் தளமாக் கொண்ட ஸ்பேஸ் வன் (Space One) எனும் நிறுவனத்தின் Kairos எனும் ரொக்கெட், வாகாயாமா பிராந்தியத்திலுள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஏவுதளத்திலிருந்து இன்று காலை ஏவப்பட்டது.
18 மீற்றர் நீளம் கொண்ட இந்த ரொக்கெட்டில் ஜப்பானிய அரசின் சிறிய சோதனை செய்மதி ஒன்றும் ஏற்றப்பட்டடிருந்தது.
செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய ஜப்பானின் முதல் தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் வன் (Space One) நிறுவனம் மாற முயன்றது.
எனினும், ஏவப்பட்டு சில விநாடிகளில் இந்த ரொக்கெட் வெடித்துச் சிதறியுள்ளது.
இச்சோதனை தோல்வி அடைந்தது குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்பேஸ் வன் (Space One) நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை உயிர்ச் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.