சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 தொடர்களைகொண்ட கிரிகெட் போட்டியானது தற்சமயம் நடைபெற்று வருகிறது.
இவ் இரு தொடர்களுக்கான புதிய அணி தலைவர்களை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. இதற்கமைய T20 தொடருக்கான அணி தலைவராக வனிந்து ஹசரங்கவும் ஒரு நாள் தொடருக்கான தலைவராக குசல் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குசல் மெண்டிஸ் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்ற இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் 2:30 மணியளவில் கொழும்பிலுள்ள ஆர் பிறேமதாச மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.