2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன.
அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் தஜிகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
தஜிகிஸ்தான் அணி சார்பாக பர்விஷ்டோன் உமர்பயெவ் 80 ஆவது நிமிடத்திலும் நூரித்தீன் கம்ரோகுலொவ் மேலதிக ஆட்டநேரத்தின் 2 ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோலை பெற்றனர்.
லெபனான் அணி சார்பாக பஸ்ஸெல் ஜ்ராடி 47 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பெற்றதுடன், கஸ்ஸம் அல் ஷெய்ன் 56 ஆவது நிமிடத்தில் நடுவரால் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டார்.
இந்த வெற்றியுடன் தஜிகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் A குழுவின் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும் தஜிகிஸ்தான் அடுத்த கட்ட சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள 4 போட்டிகளில் C குழுவின் போட்டிகளில் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளும், ஹொங் கொங் மற்றும் பலஸ்தீன் அணிகளும் மோதவுள்ளன.