கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மார்பக சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியர்களின் கவனக்குறைவால் கடந்த 31ம் திகதி உயிரிழந்துள்ளார்.
நூகேகொட பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 6A விடுதியில் அனுமதிக்கப்பட்ட நபரே சத்திர சிகிச்சையின் போது சுவாசத்திற்கான ஒட்சிசன் வாயுவிற்கு பதிலாக காபனீரொக்சைட் வாயு வழங்கப்பட்ட நிலையிலே உயிரிழந்துள்ளார்.
சுகாதார வல்லுனர் சங்க தலைவர் ரவிகுமுதெஷ் இச் சம்பவமானது வைத்தியசாலை பராமரிப்பு பணிகளில் காணப்பட்ட குறைபாட்டால் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இச் சம்பவம் மறைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையில் வழமைபோன்று ஏற்பட்ட மூச்சுத்தினறல் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் நிலவுவதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.