அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”ஒரு கட்சிக்கு கொள்கை இருக்க வேண்டும் எங்களை நம்பும் இளைஞர்கள் எங்களுடன் சேர வாய்ப்பு உள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அது எதிர்காலத்திற்கு ஏற்றதல்ல .

இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. நீதிமன்றம் வழங்கிய முன்னுதாரணத்தின் பிரகாரம் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 05 வருடங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும்” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here