எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் முஹம்மட் இல்யாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முஹம்மட் இல்யாஸின் இறப்புச் சான்றிதழை ஆணைக்குழுவில் சமர்ப்பித்து புதிய வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய வேட்பாளரின் நியமனம் மூன்று நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







