இலங்கையில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டை சமாளிக்க, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் உப்பின் முதல் பகுதி இன்று (23) இரவு நாட்டை வந்தடையவுள்ளது.
முதலில் நேற்று வரவுள்ளது என எதிர்பார்க்கப்பட்டும், காலநிலை சிக்கலால் கப்பலின் வருகை தாமதமாகியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் 3,050 மெட்ரிக் தொன் உப்பு உள்ளடங்கிய தொகுதி வரவுள்ளதாக தேசிய உப்பு நிறுவனத் தலைவர் கயான் வெல்லால கூறியுள்ளார்.
இந்த உப்பு விநியோகத்தின் ஊடாக, எதிர்வரும் வாரத்தில் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








