நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதுடன்  இரண்டாவது அதிகளவான முறைப்பாடுகள் கம்பஹாவிலிருந்தும் மூன்றாவது அதிகளவான முறைப்பாடுகள் குருநாகலிலிருந்தும் கிடைக்கபபெறுவாதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவர் தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை ஊடகங்களில் தெரிவித்திருந்தார், அது குறித்து கேட்டபோது அவர் இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here