குளியாப்பிட்டிய, விலாபொல பிரதேசத்தில் உள்ள விகாரையின் பீடாதிபதி ஒருவரை தேங்காய் வெட்டும் கத்தியால் தாக்கிய சந்தேக நபரை, உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யச் சென்ற போது, ​​குறித்த சந்தேக நபர் காயமடைந்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் தேங்காய் வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உப பொலிஸ் பரிசோதகரிடமிருந்து தப்பிச் செல்லும்போது தவறி விழுந்ததில் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here