2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பங்காளர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அழகு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் நிறைந்த இலங்கையை பார்வையிட சகலரையும் அழைப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 150,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.








