தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 836 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 812 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை.
மேலும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 21 முறைப்பாடுகள் இலங்கை காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 35 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவற்றில் 14 முறைப்பாடுகள் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பானவை.
ஜனாதிபதித் தேர்தலின் போது அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக தேர்தல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.








