இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் டிம் சௌத்தி ஒரு சிக்சரை விளாசியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை (89) விளாசிய வீரர்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக பிறயன் லாறா 88 சிக்சர்களை விளாசியிருந்தார். பென் ஸ்டோக்ஸ் (131 சிக்சர்கள்) முதலிடத்திலும், பிரண்டன் மெக்கல்லம் (107 சிக்சர்கள்) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.








