கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (01.04.2025) கவனியீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற முழங்காவில் ஆரம்ப வித்தியாலயத்தில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முழங்காவில் பொலிஸ் நிலையம் மற்றும் மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடுகளை தெரிவித்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் இன்றைய தினம் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன் இதற்கான தீர்வு வரும் வரை தாங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இப் போராட்டத்தை தொடர்ந்து குறித்த பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.
[கிளிநொச்சி நிருபர் – பரமசிவன்]








