தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் சில வெளியேறும் இடங்களில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தளை வெளியேறும் இடம்
வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தை வெளியேறும் இடம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகம நுழைவாயில் மற்றும் யக்கபிடிய வெளியேறும் இடம்,

ஆகிய பகுதிகளுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனவே அந்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் கவனத்துடனும் அக்கறையுடனும் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here