ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுபா பாஸ்குவாலுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வங்கியொன்றின் கொக்கல மற்றும் மத்துகம கிளைகளிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






