நாட்டில் இருக்கும் அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தால் நிறுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் புங்குடுதீவில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கு வழங்கப்பட்ட கடலட்டை பண்ணைகள் சரியான முறையில் வழங்கப்படவில்லை, அதில் முறைகேடு நடந்திருக்கிறது. இதனால்தான் அதனை தற்போது வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றோம்.

இதற்கு முதல் இருந்த அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ நீங்கள் இலஞ்சம் கொடுத்திருக்கலாம், ஆனால் எங்களுக்கு நீங்கள் இலஞ்சம் கொடுக்க தேவையில்லை,

வரவு செலவு திட்டத்தின் பின்னர் கிராமத்தை நோக்கி நிதி பாய்ச்சலை செய்வதே அரசாங்கத்தின் நோக்கும்.

சிறப்பு நிதி ஒதிக்கீட்டில் குறிகாட்டுவான் இறைங்குதுறையை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

இந்தியா மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தி.மு.க எம்.பி கனிமொழி தலைமையில் நடைபெறுகின்றது.

எனவே கனிமொழி எம்.பி அவர்களே உங்களுடைய மீனவர்களிடம் சொல்லுங்கள் எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம் என.

நான் எப்போதும் எங்களுடைய மீனவர்களின் பக்கமே இருப்பேன் என தெரிவித்தார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here