நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியலாளர்கள் இன்றும் நாளையும் சுகவீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

நீர்ப்பாசனத் திணைக்கள உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு முறைமையில் நிலவும் முரண்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here