மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா புறப்பட உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உட்பட 05 பேர் கொண்ட குழுவொன்று இதற்காக புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

அந்த சட்ட நடவடிக்கைகள் குறித்து சவூதி அரேபியாவின் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி சரியான முறையில் அந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்து மூலம் மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதன் காரணமாக சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை வழங்க சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here