இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட ஏற்றுமதி தரவுகளின்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் ஆடை ஏற்றுமதி வருமானம் 469.6 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2026 ஓகஸ்ட் மாதத்தில் அது 434.8 மில்லியன் டொலராக குறைந்துள்ளது.
மேலும், 2026 ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் ஆடை ஏற்றுமதி வருமானம் 3,108.3 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் அது 3,318.1 மில்லியன் டொலராக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆடை ஏற்றுமதி வருமானம் சுமார் 6.3 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்தமாக ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியும் ஓகஸ்ட் மாதத்தில் 8.4 சதவீதம் குறைந்துள்ளதுடன், ஜனவரி-ஓகஸ்ட் காலப்பகுதியில் 6.7 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த தரவுகளின்படி, இலங்கையின் முக்கிய அந்நிய செலாவணி ஈட்டும் துறையான ஆடைத் தொழில் இந்த ஆண்டு இதுவரை சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








