சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (05) கூடவுள்ள எதிர்க்கட்சிகளின் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் அனைத்து தலைவர்களும் கலந்துரையாடி வருகின்றனர்.
தற்போது நாம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வரைவு செய்துள்ளோம். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்கும் திகதி குறித்து நாளை தீர்மானிப்போம்.”என தெரிவித்துள்ளார்.








