சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெறுவதற்கு அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோரை இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்த விடயத்தில் சட்டரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தலையிடுவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சவுதி மன்னரிடமிருந்து இது தொடர்பில் மன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர ரீதியில் எழுத்துப்பூர்வமாக கோர நடவடிக்கை எடுப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு செய்தல் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் மூலம் இதுவரை உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவரது பெற்றோருக்கு இங்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, நெருக்கமாக ஆய்வு செய்து வருவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here