கடவத்தை வாபட பகுதியில் எட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொல்லப்பட்ட பாதாள குழு செயற்பாட்டாளர் டொன் பிரியசாத்தின் சகோதரரின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் தந்தையே டொன் பிரியசாத் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாபடவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இருந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, பொலிஸார் 2 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின்,  534 வெவ்வேறு வகை தோட்டாக்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எட்டு துப்பாக்கிகள் மற்றும் இரண்டு ஜோடி கைவிலங்குகளை மீட்டனர்.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் குற்றவாளி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை சேமித்து வைத்து, அவரது அறிவுறுத்தலின் படி பல்வேறு நபர்களுக்கு விநியோகித்து வந்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டை தளமாகக் கொண்ட குற்றவாளிக்கு துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்கு பொறுப்பான முக்கிய நபர் சந்தேக நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here