அமெரிக்காவின் வரி விதிப்புக் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த குழு வொஷிங்டனுக்கு பயணிக்கவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார முன்னுரிமைகளைக் கருத்திற் கொண்டு, வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்தல் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ளல் என்பன இந்த கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here