உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதன்படி கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (23.05.2025) ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிகார தனது ரத்தோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதே போல மாகாண சபை முன்னாள் அமைச்சர் சம்பிக்க விஜேரட்ன தம்புள்ளை அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை என்பது எதிர்பார்ப்பு மிக்க நாளாகவே மாதம் ஒரு முறை அமைகின்றது.
இந்த வெள்ளிகிழமை அரசியலில் எதாவது மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கு அரசியல் வாதிகள் தீண் போட்டுக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இதன்படி, நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு சபைகளை கைப்பற்றுவதில் கட்சிகளுக்கிடையில் போட்டியும் பொறாமையும் தலைதூக்கி இருந்தது.
மத்தியில் ஆளும் அரசாங்கத்தை உள்ளூர் சபைகளில் ஆட்சி அமைக்க விடக் கூடாது என்பதில் எதிர்க் கட்சிகள் கங்கணம் கட்டிகொண்டு அலைந்தார்கள்.
குறிப்பாக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றினைத்து உள்ளூர் சபைகளை ஆள முயற்சித்தாலும் மக்களால் தெரிவு செய்யப்ப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உள்ளூர் சபைகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் மும்முறம் காட்டினர்.
இருந்தாலும் உள்ளூர் சபைகளை ஆட்சி அமைக்கக் கூடிய அதிகாரமிக்க எண்ணிக்கையை கொண்டிராத சபைகளை கைப்பற்றுவதில் எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டினார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு கட்சிகளுடன் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் பேச்சுவார்த்தை கை கூடினாலும் தலைமைத்துவத்திற்குள் உள்ள போட்டியும் பொறாமையும் எல்லாவற்றையும் தட்டி பறித்துவிட்டது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி ராஜபக்ஷக்களோடு கூட்டு சேர்த்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக செய்திகள் அடிபட்டன.
இதனைத்தொடர்ந்து கட்சிக்குள் ராஜபக்ஷக்களின் வரவை விரும்பாதவர்கள் ”பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைப்பாட்டில் இருப்பது போன்று இராஜினாமா அமைவதாக தோனுகிறது.








