பின்னவல கித்துல்கல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட தீர்மானம் பின்னவல கித்துல்கல சுற்றுலா வலயத்தின் அபிவிருத்திக்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்கு 750 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதன்படி பின்னவல கித்துல்கல சுற்றுலா வலய அபிவிருத்தித் திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here