தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் கவிழும் என்ற எதிரணியின் பிரச்சாரம் நகைச்சுவைத்தனமானது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கூட அரசியல் சூழ்ச்சியின் ஓர் அங்கம் தான் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு கூட்டு பொறுப்புடன் செயற்படும் ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதற்கமைய நாம் கூட்டு பொறுப்புடன் செயற்படுவாதாகவும் இந்த அரசாங்கத்தில் தனிநபர் ஆதிக்கம் கிடையாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மறுசீரமைப்பு இடம்பெறவேண்டுமென்றாலும் கூட அதனையும் கூட்டுபொறுப்புடனேயே செய்ய உள்ளதாகவும் அமைச்சரவை மறுசீரமைப்புக்குரிய தேவைப்பாடு தற்போது எழவில்லை என்றும் கூறினார்.








