போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் டிராக்டர்கள் இறக்குமதி என்ற போர்வையில் சொகுசு கார்களை இறக்குமதி செய்யும் மோசடி செயல் கடந்த கோபா குழுவில் அம்பலமானது.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு என்று கூறி இறக்குமதி செய்யப்பட்ட 158 வாகனங்களின் உரிம நிபந்தனைகளை அதே அதிகாரிகள் மீறியிருப்பது கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற கோபா குழு கூட்டத்தில் மேலும் தெரியவந்தது.







