விபத்தில் சிக்கி காயமடைந்த நபரொருவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபரான இராணுவ சிப்பாயின் சகோதரன் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது சந்தேக நபரான இராணுவ சிப்பாயும் அம்பியூலன்ஸில் ஏறியுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரான இராணுவ சிப்பாய் அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் தெரிவித்ததையடுத்து, சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பொலிஸ் அதிகாரியையும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவரையும் அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அதிக மது போதையிலிருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here