நாட்டில் இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவு இருந்தாலும், அதற்கு பணியாமல் நாட்டின் பிரச்சினைகளை சுயமாக தீர்க்க வேண்டும் எனவும் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“எங்களிடம் இருந்த பிரச்சினைகள் பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளை விட கடுமையானவையாக இருந்தாலும் ஜனநாயகத்தை பாதிக்காமல் நிலைமையை கட்டுப்படுத்த முடிந்தது.
போராட்டம் ஒடுக்கப்பட்டது என்று பல சர்வதேச ஊடகங்கள் கூறினாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றேன். இது எந்தவொரு ஒடுக்குமுறையிலும் பார்ப்பதற்கு இல்லாத விஷயம்.”

அதேவேளை, பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் முன்வைத்த கோரிக்கை, உணவு, எரிபொருள் தேவை என அந்த கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், ஊழல் ஒழிப்பு நோக்கில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதையும் அவர் வலியுறுத்தினார்.

“இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்று. இதை பாதுகாப்பது எந்த அரசாங்கத்தினதும் கடமை. ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாவிட்டால், ஆட்சி செய்ய முடியாது,” என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here