எதிர்க்கட்சிகள் இன்று நுகேகொடையில் முன்னெடுக்கவுள்ள பேரணியை முன்னிட்டு, அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நுகேகொடை மேம்பாலம் அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதி வழியாக நாவல சுற்றுவட்டம் வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாற்றுப் பாதைகளாக
- கொழும்பு / கொஹூவளை → நுகேகொடை → நாவல / புறக்கோட்டே நோக்கி பயணிப்பவர்கள்:
ஹைலெவல் வீதியின் கம்சபா சந்தியில் இடதுபுறம் திரும்பி, கட்டிய சந்தி வழியாக மிரிஹான அல்லது நாவல நோக்கிச் செல்லலாம். - புறக்கோட்டே / நாவலை → நுகேகொடை → ஹைலெவல் வீதி நோக்கி பயணிப்பவர்கள்:
நாவல சுற்றுவட்டத்தில் இருந்து கட்டிய சந்தி – கம்சபா சந்தி – தெல்கந்த சந்தி வழியாக ஹைலெவல் வீதிக்குச் செல்லலாம். - மகரகம → ஹைலெவல் → நுகேகொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள்:
கம்சபா சந்தியில் வலதுபுறம் திரும்பி, கட்டிய சந்தி வழியாகச் செல்ல வேண்டும்.
இந்த பயணத் திட்டங்களை அமைக்கும் போது இந்த மாற்றங்களை கருத்தில் கொள்ளுமாறு காவல்துறை, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.








