டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-434 விமானம் நேற்று (20) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த அவசரத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பயணி தரையிறங்கியவுடன் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான Airbus A380 இந்த விமானம்,
இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்கில் தரையிறங்கியது.பின்னர் இரவு 9.20 மணியளவில் மீண்டும் பிரிஸ்பேன் நோக்கி புறப்பட்டது.








