உலக உணவுத் திட்டத்தின் கீழ் வறிய குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு நாட்டிற்கு கிடைத்த 1556 மெற்றிக் தொன் அரிசி, பேரீச்சம்பழம் மற்றும் பருப்பு வகைகள் வெயங்கொடை அரசாங்க மாவட்ட களஞ்சியசாலையில் அழுகியுள்ளதாக அவதானிப்பு விஜயத்தின் போது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன்மபாலகம தலைமையிலான குழுவினர் இதனை அவதானித்துள்ளனர்.
வெயங்கொடை மாவட்ட உணவு களஞ்சியசாலையில் காணப்படும் உணவுப்பொருட்கள் தற்போது மனித பாவனைக்கு தகுதியற்றதாக காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு இந்த கிடங்கிற்கு கொண்டு வரப்பட்ட சில உணவு பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாடசாலை விடுமுறைக்கு பின் உணவு பொருட்கள் வழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் தெரிவித்துள்ளனர்.
1556 கிலோ மெற்றிக் தொன் அரிசி பருப்பு மற்றும் பேரீச்சம்பழம் மனித பாவனைக்குத் தகுதியற்றவை தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதை பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் கண்டுபிடித்தனர்.
இதேவேளை, இந்த உணவு இருப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கம்பஹா மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.








