அரசாங்க வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நால்வரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் கையூட்டல் பெற்ற ஒரு பெண் உட்பட இருவரை கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.

குட்டிகல – பதலங்கல பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபரை தலா ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here