Tuesday, July 28, 2026
No menu items!

சரீரப் பிணை

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி...

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சந்திராணி பண்டார, அமைச்சராக இருந்தபோது சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சின் திட்ட இயக்குநராக எச்.எம். சந்திரவன்சவை...

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.    

துசித ஹல்லோலுவ பிணையில் விடுவிப்பு!

இலங்கை தேசிய லாட்டரி வாரியத்தின் பதில் இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லோலுவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். தேசிய லாட்டரி வாரியத்தின் பதில் இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லோலுவ, தலா ரூ. 200,000/= வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபருக்கு வெளிநாட்டுப்...

அரசாங்க வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி பண மோசடி; இருவர் கைது!

அரசாங்க வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நால்வரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் கையூட்டல் பெற்ற ஒரு பெண் உட்பட இருவரை கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. குட்டிகல - பதலங்கல பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களில்...

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு இன்று (1/17/2025) பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்தில் வேலை வாங்கித்...

அக்கரைப்பற்றில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி பிணையில் விடுவிப்பு…

அக்கரைப்பற்றில் சீவிய நல உரித்து ஒன்றை கிரயமாக மாற்றி விற்பதற்கு உறுதி  எழுதிய சந்தேகத்தின் பேரில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் உட்பட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் திங்கட்கிழமை (04.11.2024) சரீரப் பிணையில் விடுவித்தார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின்...

மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட பாடசாலை சமூகத்தினர்…!

தனமல்வில பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர், ஒரு ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பான விபரங்களை பொலிஸாரிடம் மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே...

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சரீரப் பிணை !

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் இன்றைய தினம்  சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு...

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த நபர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோது 75000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். எதிர்வரும் 21 ம் திகதி குறித்த நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகுமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது. வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img