நாடாளுமன்ற சிறப்புரிமை குழு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (2/21/2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன மீதான முறைப்பாடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறப்புரிமை குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹேமாலி வீரசேகர, விஜித ஹேர்த் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here