கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அழகான கடற்கரையுடன் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலத்தை உருவாக்கும் நிகழ்வு இன்று (09/02/2025) காலை 8.00மணிக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
அரச, தனியார், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்வு மட்டக்குளி காக்கை தீவு கடற்கரையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வளமான நாடு அழகான நாட்டை உருவாக்குவதற்காக அணி திரண்டுள்ள இவ்வேளையில், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அழகான கடற்கரை கவர்ச்சிகரகமான சுற்றுத்தளத்தை அமைப்பதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று (09/02/2025) இந்த ஆரம்ப நிகழ்விற்கு இணங்க, மேற்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளை உள்ளடக்கியதாக 51 இடங்களில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், பெப்ரவரி 16ஆம் திகதி கிழக்கு கடற்கரையோரங்களிலும், பெப்ரவரி 23ஆம் திகதி வடமத்தி மற்றும் வடக்கு கரையோரங்களிலும் இடம்பெறவுள்ளது.
அழகான கடற்கரையின் பங்காளியாவதற்கு உங்கள் அனைவரையும் தங்களுக்கு அருகிலுள்ள இடங்களில் கலந்துகொள்வதற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.








