அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட்டுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியின் ஆபிஸ் தொடரின் மூலம் அறிமுகமான இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்.
தொடர்ந்தும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் 2021ம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
தற்போது நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் ‘நொடிக்கு நொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இவரின் புகைப்படம் அவரது இரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










