இம் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் (2/13/2025) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு அவர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வரவு வைக்கப்படவுள்ளது.
இதற்காக 12.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.








