பலாங்கொடை – கிரிதிகல பகுதியில் உள்ள உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பான போத்தலொன்றை நுகர்வு செய்து அருந்திய தந்தையும் அவரது மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பானத்தை அருந்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரியை சேர்ந்த 40 வயதான தந்தையும் 9 வயதான அவரது மகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.







