உணர்ச்சி ரீதியாக மக்களுடன் பிணைப்பில்லாத அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், கார்ல்டன் இல்லத்திற்கு வந்த தருணத்திலிருந்து தம்மை சந்தித்து ஆசீர்வதித்த மகாசங்கத்தினருக்கு நன்றியையும் தெரிவித்தார்.

“என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனேயே கழிந்தது, இன்றும் அதேபோல் உள்ளது. பதவிக்காலம் முடிவடையலாம், ஆனால் மக்களின் அன்பு ஒருபோதும் முடிவதில்லை. ஆட்சியிலோ, அதிகாரத்திலோ இல்லாவிட்டாலும் மக்கள் எப்போதும் எனக்குப் பக்கமாயிருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.

கிராமங்களில் உள்ள நட்பு, பிணைப்புகள், சிறுவர்களின் உரையாடல்கள் ஆகியவை தான் தம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன என்றும், இவை தான் உண்மையான தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

“இனம், மதம் பாராமல் மக்களின் தலைவராகவும், அண்டை வீட்டாராகவும், நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here