ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் நேற்று (23) நடைபெற்ற போட்டியில், இலங்கை அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓட்டங்களை பெற்று பங்களித்தார்.
பாகிஸ்தான் அணிக்காக சஹீன் ஷா அப்ரிடி சிறப்பான பந்துவீச்சை நிகழ்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
134 ஓட்டங்களைக் குறியாக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.







