நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று காலை பரபரப்பான இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
Parkwind மற்றும் Pilestredet பகுதிகளில் இந்த வெடிப்புகள் நடைபெற்று, அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவரை நோர்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அந்த பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய தகவல்களின்படி, வெடிக்காமலிருந்த ஒரு கையெறிகுண்டும் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒஸ்லோ காவல்துறை தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் (Brian Skotnes) கூறியதாவது:
“சம்பவம் நடைபெற்ற பகுதிகள் தற்போது முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம் எனவும், குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.”
மேலும், பிஸ்லெட் (Bislett) விளையாட்டு அரங்கத்திலிருந்து வந்த சிற்றூந்து ஒன்று சந்தேகத்துக்கு இடமாக இருந்ததாகவும், அதிலிருந்தே இரு கையெறிகுண்டுகள் வீசப்பட்டதாகக் சம்பவத்தைக் கண்ட சிலர் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை உயிரிழப்பு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.








