இந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை பெண் தேசிய அணி நேற்று (அக்டோபர் 14) விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய அணியினருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக பதினான்கு (14) ஆசிய நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த ஆண்டுக்கான போட்டியின் தொடக்க விழா அக்டோபர் 17ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அக்டோபர் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ளது.








