கட்டுகஸ்தோட்டை பகுதியில் சில இடங்களுக்கு 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக இந்த நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (06) காலை 9.00 மணி முதல் அக்டோபர் 08 ஆம் திகதி காலை 9.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுவாவல, ராஜபிஹில்ல மற்றும் கோனிகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும்.
நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த காலப்பகுதிக்கு சேகரித்து வைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் சபை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.








