சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள மர ஆலையத்தில் நேற்று (29.08) கனரக வாகனத்தில் இருந்து மரக்குற்றியை இறக்கும் போது ஆண்ணொருவர் மீது மரக்குற்றி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ரசி குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here